about us

Who We Are

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன், தொழிலாளர் வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கை எங்கிருந்து வந்தாலும் அதனை முறியடிப்பதுதான் தங்கள் முதல் பணி என்ற முழக்கத்தோடு தோன்றியது.

1957ல் தொடங்கப்பட்ட மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் மின்சார சட்டம் 2003ன் வரவுக்கு பிறகு கம்பெனி சட்டத்தின் கீழ் பணியாற்றிவருகிற போதும் பழைய நிலையே தொடர்கின்ற அளவில் பொதுத்துறையை பாதுகாத்திட முனைவதையே தங்கள் தலையாய கொள்கையாக கொண்டது எம்ப்ளாயீஸ் பெடரேஷன்.

தொழிலின் வளர்ச்சியில்தான் தொழிலாளர் நலனை மேம்படுத்த இயலும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இருதூண் கொள்கையை கொண்டுள்ளது நம் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன்.

வாரியத்தின் வயதையொத்தவர்கள் அனுபவத்தோடும், தலைமுறை இடைவெளி இருந்தாலும் தளபதிகளாக நிற்பவர்களோடும் மின்சார வாரியத்தின் எதிர்காலம் எம்ப்ளாயீஸ் பெடரேஷன் கரங்களில்தான் என எண்ணுபவர்கள் யாவரும் இணைந்து நின்று செயல்படுத்துவதுதான் எம்ப்ளாயீஸ் பெடரேஷன்.

மின்சார வாரியத்தின் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுள் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களையும், அலுவலர்களையும், பொறியாளர்களை, உறுப்பினர்களாக கொண்டிருப்பதும், ஒட்டுமொத்த மின்சாரத் தொழிலாளர்களிடத்தில் பெரும் நம்பிக்கையை பெற்றிருப்பதும் எம்ப்ளாயீஸ் பெடரேஷனின் சிறப்பாகும்.

மின்சார வாரிய பணியிலிருப்போர்கள் மட்டுமின்றி மின்சார வாரியத்தில் நிரந்தரத்திற்காக காத்திருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி அனுமதிக்காக காத்திருக்கும் பகுதி நேர பணியாளர்கள், வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் படித்த இளைஞர்கள் யாவருக்குமான பணிகளை செய்வதில் முன்னணியில் நிற்பதும் எம்ப்ளாயீஸ் பெடரேஷன்.

தலைமைப் பண்புக்கு உரித்தானவர்களாக இளைய தலைமுறைகளை உருவாக்கி அடுத்த கட்ட பயணத்தில் தலைவராக நின்று வழிநடத்த அடித்தளமிட்டு தொழிற்சங்க பணிகளை கற்றும் தரும் பயிற்சிப் பட்டறையாகவும் எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திகழ்கிறது.

தொழிலாளர்கள் நலம் பேண போராட தயங்காத சங்கமாக தோன்றிய காலம் முதல் போராட்ட பாதையை வகுத்தெடுத்து வெற்றி கண்டதுடன் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் மாநாடு கண்ட மின்சார வாரிய வரலாற்றில் தொழிற்சங்க செயல்பாடுகளில் பிறர் கண்டு வியங்குமளவில் மிளிர்ந்து செயலாற்றும் சங்கமாக தொடர்வதும் எம்ப்ளாயீஸ் பெடரேஷன்.

  • எம்ப்ளாயீஸ் பெடரேஷனில் இணைந்திடுவீர்!
  • எம்ப்ளாயீஸ் பெடரேஷன் நியூஸ் வழியாக நமது செயல்பாடுகளை மின்சாரக் கம்பி செல்லுமிடமெங்கும் எடுத்து சென்றிடுவீர்!
  • ஒட்டுமொத்த மின்சாரத் தொழிலாளர்களும் ஒரு குடையின் கீழ் பயணிக்குமளவில் செயல்படுவார்!
  • நாளைய வரலாறு நம் கையில்!
  • எம்ப்ளாயீஸ் பெடரேஷன் என்பதே வரலாறாகும்!